"பல்”லாண்டு வாழ்க



 ஒபாமா பக்கத்தில் வந்து எப்படி இருக்கே என்று கேட்டாலும் சரிதான் போய்யா என்று வள் என்று விழத்தோன்றும் நேரம் எது?
அதிசயமா மனைவி டிசைன் எதுவும் எனக்கு பிடிக்கலை என்று அவளுக்கு  புடவை எடுப்பதற்க்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் திருப்பி புன்னகை கூட பண்ணமுடியாத சமயம் எது?

அது தான் பல் வலி எனப்படும் மூஞ்சி வலியால் நாம் நாமாக இல்லாத நேரம்.  நான் பல் வலி என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன் பல்லில் இருந்து ஆரம்பித்து தங்கம் விலை போல் வலி ஏறு முகமாகவே இருந்து தாடை.காது மூளை என்று முகம் முழுவதும் வியாபித்து இரவு முழுவதும் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.
எனக்கு என்னமோ பல்லில் வரும் வலி அதை நன்கொடையாக ஒரு பல் வைத்தியரிடம் கொடுத்தால் தான் தீரும்.

இங்கு ஒவ்வொரு பல் டாக்டருக்கும் ஒன்று ஒன்று என்று பல் தானம் பல கொடுத்திருக்கின்றேன். நிறைய டாக்டரிடம் போனதுக்கு காரணம் ஒரு பல் டாக்ராவது எனக்கு நல்ல செய்திகொடுப்பவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை தான் காரணம். என்னதான் அவர்கள் இனிமையாக பேசினாலும் எனக்கு அவர்கள் ஹிரண்யகசிபுக்கு தம்பி மாதிரியே தோன்றுகின்றார்கள்.
நான் கின்னஸ் ரிக்கார்ட் க்கு எழுதிப்போடலாம் என்று இருக்கின்றேன் நான்தான் அதிகப்பட்ச பல் டாக்டரை களைப்பார்த்திருப்பேனோ என்று. எனக்கு சந்தேகம்.
கிட்டதட்ட நானே முக்கால் பல் டாக்டராகி விட்டேன் என நினைக்கிறேன்.
என் பல் எக்ஸ் ரே பார்த்து பார்த்து நானே எங்கே கேவிட்டி இருக்கு என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ரூட் கேனால்,ஃபில்லிங்,க்ரொளன்,ப்ரிட்ஜ் ,இம்ப்ளாண்ட் மற்றும் ஃப்ளாப் சர்ஜரி என்று அத்தனை வார்த்தைகளுக்கும் என் வாய் இடம் அளித்திருக்கின்றது.(பேரேசஸ் மட்டும் நான் போடலை)பல்லை பிடுங்கிக்கொண்டு  வாயில் ரத்தம் வழிய டிராகுலா மாதிரி நான் கார் ஓட்டிக்கொண்டு சிக்னலில் நின்ற போது பக்கத்து காரில் உள்ள ஒரு வயதான மாது என்னைப்பார்த்து மிரண்டது நிஜம்.

பல் பிடுங்கியதே தெரியாத அளவுக்கு தேர்ச்சியாக பிடுங்கும் டாக்டர் விஷ்ணு பிரசாதிலிருந்து,குடும்பக்கதை பேசிக்கொண்டே ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மிக்சிகன் பல் டாக்டர் சசிரேகா மற்றும் ராசியான எனக்கு பிடித்த ஒரு அரேபியன் பல் டாக்டர், இங்கு பிலடெல்பியாவில் என் பாதி கடவாய் பில்லை பிடுங்கி விட்டு பின்பு மீண்டும் சுவரில் ஓட்டை போடும் மிஷின் போன்ற கருவியால் மிச்ச பல்லை பிடுங்கிவிட்ட அமெரிக்க டாக்டர் என்று எத்தனை பல் டாக்டர்கள் .
நான் அவர்களுக்கு கொடுத்த ஃபீஸில் போயஸ் கார்டன் ஏரியாவில் ஒரு வீடு வாங்கியிருக்கலாம்.
நான் பார்த்த பல் டாக்டர்கள் அல்லது என் பல்லை பார்த்த வன்முறையாளர்கள் ஆனால் என் நண்பர்களாக ஆனவர்கள்.

பாண்டிச்சேரியில் இருவர்.
மதுரையில் ஒருவர்
சென்னையில் ஒருவர்
டில்லியில் ஒருவர்.
ஹாங்காகில் ஒருவர்.
மிக்சிகனில் நால்வர்
கலிபோர்னியாவில் ஒருவர்
பிலெடெல்பியாவில் நால்வர்( ஸ்பெஷ்லிஸ்டை சேர்த்து)
பல் வலிக்கு சில நிவாரணங்கள்.
  1. இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி குறையும்.
  2. மிளகுடன்  சர்க்கரையைச் சேர்த்து  அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்
  3. வெங்காயத்தை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி வலிக்கின்ற இடத்தில்  வைத்தால் பல்வலி நீங்கிவிடும்.
  4. பெருங்காயப் பொடியை வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.
  5. கிராம்பு தைலம்  தடவலாம்
  6. ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு மெல்ல பல் வலி குறையும்
  7. கை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஐஸ் கட்டியை தேய்த்தால் பல் வலி குறையும்

போன வாரம் பல் வலி வந்த போது இத்தனையும் மாலை 6 மணியிலிருந்து மறு நாள் காலை வரை செய்து பார்த்துவிட்டு வலி நிவாரணி advil இரண்டு முழுங்கினாலும் வலி எல்லாவற்றுக்கும் ஏற்கனவே பழகிவிட்டதால் உனக்கும் பெப்பே உன் அப்பவனுக்கும் பெப்பே என்று அழிச்சாட்டியமா போகவில்லை

பல் டாக்டரிடம் ஓடி மொய் எழுதினவுடன் தான் வலி கொஞ்சம் தேவலை.அங்குள்ள நீளமான நாற்காலியில் சாய்ந்துகொண்டு அல்லது பாதி படுத்துக்கொண்டு அவர்களின் உபகரணங்களை பார்த்தவுடன் இப்போ வயிற்றிலும் வலி.கண்ணை மூடிக்கொண்டு வாயை திறந்து கொண்டு 24 பல்லையும் டாக்டரிடம் ஒப்படைத்த போது அந்த அழகான பிலிப்பன்ஸ் பெண் பல் டாக்டர் முனி பார்ட் 2 விளம்பரத்தில் வரும் பெண் போல என் மனக்கண்ணுக்குள் தோற்றமளித்தாள்.
கண்ணன் வாய்க்குள் உலகத்தை பார்த்த யசோதை மாதிரி என் வாயை பார்த்து ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்ட அவள் ஒரு நற்செய்தி(?) சொன்னாள்..இது பல்வலி யும் ஈறு வலியும் கலந்தது..பல்வலிக்கு நான் சரி செய்கிறென் ஈறு வலிக்கு வேறு ஒரு டாக்டரை ஸ்பெஷலிஸ்ட்) பாருங்கள் என்றாள். மறுபடியும் முதலில் இருந்தா?



திருமணமாம் திருமணமாம்

சில திருமண மரபுகள்
  
மெக்சிகன்; Animated Flag of Mexico
சிவப்பு மணிகள் மணமக்கள் வரும் வழிநெடுகிலும் தூவப்படும்.அது அவர்களுக்கு செழிப்பை கொடுக்கும் என்று நம்புகின்றார்கள்.

ஆப்பிரிக்கா Animated flag of Afro-American - USA
இன்றும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இடையே இந்த பழக்கம் நிலவுகிறது.ஒரு துடப்பத்தை மணமக்கள் இருவரும் குதித்து தாண்டவேண்டும். ஆபிரிக்க அமெரிக்கர் அடிமைத்தனம் போது சட்டப்படி அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியாத போது இந்த சடங்கு உருவாக்கப்பட்டது
இன்றும்  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் வரவேற்புபகுதியில் நுழையும் பொழுது விருந்தினர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்குமாறு அங்கு இருக்கும்.

பெல்ஜியம் Animated Flag of Belgium
மணப்பெண் தன் திருமண விழாவில் மேடை வரை நடந்து பின்,  அவரது பூச்செண்டிலிருந்து அவள் அம்மாவிடம்  ஒருமலரை கொடுப்பாள் பின்பு  அவர்கள் தழுவி பிரியாவிடை பெறுவார்கள். திருமண விழா முடிந்த பிறகு,புதிய ஜோடி தேவாலயத்தின் மற்றொரு பக்கம் நடந்து செல்லும் போது மணப்பெண் அவள் பூச்செண்டை அவள் மாமியாரிடம் கொடுத்து  தழுவி கொள்வாள்.

சீனா Animated Flag of China
 
மணப்பெண் , ஒரு சிவப்பு திருமண ஆடையை அணிந்துக்கொள்வாள்  சிவப்பு வர்ணம் காதல் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒன்பது  வகையான  உணவு பறிமாறப்படும் விருந்து சாப்பிட மூன்று மணி நேரம்வரை நீடிக்கும் .திருமண விழாவில் குடும்பஅறிமுகங்கள், , நகைச்சுவை நாடகங்கள், மற்றும் பலவிதமான கலைநிகழ்கச்சிகள் நடக்கும்.

பிரஞ்சு  Animated Flag of France திருமணம் என்பது இரண்டுகுடும்பங்கள் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய உடன்பாட்டை குறிக்கும் விதமாக. திருமண வரவேற்பு நிகழ்ச்சி போது, புதிய இரண்டுவெவ்வேறு திராட்சை தோட்டங்கள் இருந்து வரும் ஒயினை மணப்பெண்ணும் மணமகனும் ஆளுக்கொரு  கோப்பையில் எடுத்துக்கொண்டு அதன்பிறகுஅவர்கள் அதைஒரு மூன்றாவது கண்ணாடியில் ஒன்றாக ஊற்றி அருந்துவார்கள்..

ஜெர்மன் Animated Flag of Germany
திருமண விழாவில் போது, ஆண் பெண் மீது  தனது கட்டுப்பாட்டை காட்டும் குறியீடாக மணமகள் உடுத்தியுள்ள ஆடை  ​​மீது முழங்கால் போடுவான் பின்பு மணமகள் . அவள்   அதிகாரத்தை  காட்டும் விதமாக அவன் காலில் மீது ஏறி நிற்பாள்.

கிரேக்கம் Animated Flag of Greece
புது மணத்தம்பதிகள் திருமண சடங்கின் போது மலர்கிரீடத்தை அணிந்து  மூன்று முறை பீடத்துக்கு சுற்றி  புனித டிரினிட்டி ஐ குறிக்கும் வகையில்  நடந்து.வருவார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில், கிரேக்கம் நாட்டுப்புற நடனங்கள்  பிரபலமாக உள்ளன..
இத்தாலியன் Animated Flag of Italy
மணமகள்  பணம் பரிசுகளை சேமிக்கஒரு வெள்ளை பட்டு அல்லது சாட்டின் பணப்பை ("busta") வைத்திருப்பாள் "ட்ராண்டெல்லா" நாட்டுப்புற நடனங்கள்திருமண வரவேற்பில் கண்டிப்பாக இருக்கும்  இத்தாலிய திருமணத்தில் விருந்தினர்களுக்கு   ஐந்து சர்க்கரை-பூசப்பட்ட பாதாம்  கொடுக்கப்படும். அது உடல்ஆரோக்கியம்,செல்வம், நீண்ட ஆயுள், மக்கட்பேறு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும்

 ஸ்காட்லாந்து Animated flag of Scotland - UKமணமகன்  அவர்களின் திருமணநாள் அன்று ஒரு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேக்கரண்டியை   பெண்ணுக்கு அவளை பட்டினி போட மாட்டேன் என்று குறிக்கும் விதமாக பரிசாக கொடுப்பான். ஒரு பாரம்பரிய வாள் நடனம் சில நேரங்களில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருக்கும்

ஐரிஷ் திருமண வாழ்த்து Animated Flag of Ireland
கடவுள் உங்களுடன் இருந்து உங்களைஆசீர்வதிப்பாராக;
நீங்கள் உங்கள் குழந்தைகளின் குழந்தைகளை பார்க்கவேண்டும்.
நீங்கள், துரதிர்ஷ்டத்தில் ஏழையாக இருங்கள்
ஆசீர்வாதங்களில் பணக்காரர்களாக இருங்கள் ,
உங்கள் சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.

இது நம்ம நாடுங்க.கேட்டுப்பாருங்க
Clipart

Get this widget | Track details | eSnips Social DNA

ஹி ஹி இன்னிக்கு எங்களுடைய திருமண நாள்.

எஸ் யுவர் ஆனர்


ஒரு மனிதன் கடற்கரையோரம் ஒரு பாட்டிலை கண்டுபிடித்தான்.அதனை திறந்த போது அதனுள்ளே இருந்து ஒரு பூதம் வெளியேறியது பூதம் தன்னை விடுதலை பண்ணியதற்க்கு நன்றி தெரிவித்தது பின்பு ஏ மனிதா உனக்கு நீ விரும்பிய மூன்று வரங்களை கொடுக்கிறேன்.ஆனால் ஒரு நிபந்தனை
என்ன நிபந்தனை? என்று மனிதன் கேட்டான்..
உனக்கு என்ன கேட்கிறாயோ அதே போல் இரு மடங்கு உலகில் உள்ள வக்கீல்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றது பூதம்.
சரி என்று மனிதன் சம்மதித்து முதல் வரமாக உலகின் விலை உயர்ந்த காரை கேட்டான். உடனே அவனுக்கு ஒரு காரும் வக்கீல்கள் அனைவருக்கும் இரு கார்களும் கிடைத்தன.
இரண்டாவது வரமாக பல கோடி பெறுமான வைரங்கள் கேட்டான் அதுவும் அவனுக்கும் வக்கீல்களுக்கும் கொடுக்கப்பட்டது.
மூன்றாவதாக அவன் கேட்டது. என்னுடைய ஒரு கிட்னியை மற்றவருக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன்


ஒருவன் தன் வக்கீல் ஆபிஸுக்கு  போன் செய்து தன்னுடைய வக்கீலுடன் பேச விரும்புவதாக தெரிவித்தான்.
அவருடைய செகரட்டரி வக்கீல் போனவாரம் இறந்து விட்டதாக வருத்ததுடன் அறிவித்தாள்.
மறு நாளும் வக்கீல் ஆபிஸுக்கு அதே ஆள் போன் செய்து வக்கீல் இருக்கிறாரா என்று கேட்டான்.செகரட்டரி மறுபடியும் அவர் போனவாரம் இறந்து போனதை தெரிவித்தாள்.
அதற்க்கு மறுநாளும் அதே போன்.
செகரட்டரிக்கு இந்த தடவை ஒரே கோபம்..எத்தனை தடவை உங்களுக்கு தெரிவிப்பது அவர் இறந்து விட்டார் என்பதை என்று சலிப்பாக கூறிளாள்.
அதற்கு அவன் இந்த செய்தி  கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது சலிக்கவில்லை என்றான்.

ஒரு வக்கீல் தன்னுடைய விலையுயர்ந்த புது காரில் இருந்து இறங்கும் போது ஒரு லாரி அவருடைய காரில் உராய்ந்து சென்று ஒரு கதவை பியத்து போட்டு விட்டு சென்றது.
வக்கீலுக்கு காரைப்பார்த்து விட்டு துக்கம் தாங்கமுடியவில்லை.போலிஸுக்கு உடனே போன் பண்ணி அவர்களை வரவழைத்து லாரியை கண்டு பிடித்து தர வேண்டும் என குமறினார்.
அவரின் நிலைமையை பார்த்த போலீஸ் அதிகாரி வக்கீல்கள் சற்று பொருள் மீது ஆசை பிடித்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார். எப்படி என்று வக்கீல் கேட்டார்.
பாருங்கள் அந்த லாரி காரன் உங்கள் கார் கதவை மட்டும் எடுக்கவில்லை உங்கள் இடது கை முழுவதும் துண்டித்து விட்டது.அதைக்கூட உணராமல் கார் கதவு போனதுக்கு வருந்துகின்றீர்களே என்றார்.
அப்போதுதான் தன்னுடைய கை போனதை அறிந்த வக்கீல்
ஐயோ என்னுடைய ரோலக்ஸ் வாட்ச்சும் இப்போ காணோம் என்று கதறினார்..

ஒரு திருடன் நியூஸ்
சமீபத்தில் சிரிப்பு திருடன் சி.வேலு பற்றி எழுதினேன் அல்லவா? அது போன்ற செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது போலிருக்கிறது. இதோ நாக்பூர் நாளேடு ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி :
இவன் சிரிப்பு திருடனா (அ) செண்டிமெண்ட் திருடனா?
சஞ்சய் என்ற 29 வயது திருடன் சமீபத்தில் போலீசாரிடம் சிக்கினான். 2005 வருடத்திலிருந்து சுமார் 60 திருட்டுகள் செய்தவன். சிறு சிறு திருட்டுக்கள் என்பதால் எப்படியோ போலீசாரிடம் மாட்டாமல் இருந்துள்ளான்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , அவன் திருமணமான சுமங்கலி பெண்களிடம் தப்பி தவறி கூட நகை திருடமாட்டானாம். அவர்கள் விடும் கண்ணீரால் தன் இரு குழந்தைகளுக்கு வியாதியும் தன் மனைவிக்கு
இறப்பும் நேரிடும் என்று சத்தியமாக நம்புகிறான். இதுவரை திருடிய வீடுகளில் பணமும் ஆண்களிடம் உள்ள நகைகளையுமே எடுத்து கொண்டு பெண்கள் நகை இருந்தால் அப்படியே விட்டு விடுவானாம். அதுவும் தாலி ? மூச்.
இப்படி நல்ல செண்டிமெண்ட் இருப்பதால் அவனுக்கு தண்டனை குறையுமா? நோ என்று சொல்கிறார் சீனியர் இன்ஸ்பெக்டர். செய்த தப்புக்கு தகுந்த மாதிரிதான் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்.
தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்

புதுவை ராம்ஜி.